Map Graph

2023 செனயன் நகரத் தீ விபத்து

2023 செனயன் சிட்டி தீ விபத்து இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள செனயன் சிட்டி என்ற பேரங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தைக் குறிக்கிறது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று இவ்விபத்து நிகழ்ந்தது. பேரங்காடியின் கீழ் தளத்தில் உள்ள ஓர் உணவகத்தில் தீ பிடித்து அருகில் உள்ள மற்ற நான்கு உணவகங்களுக்கும் பரவியது. பேரங்காடியில் இருந்த தீ தடுப்பு கருவிகளும் வருகை தந்த தீயணைப்பு வீரர்களும் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தீயினால் பாதிக்கப்பட்ட உணவகங்களுக்கு சேதம் ஏற்பட்டது. சில வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் புகையை சுவாசிக்கவும் நேரிட்டது.

Read article